விஜயதசமியை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், நெல்மணிகளில் அகரம் எழுதப் பழக்கியதுடன், பேச்சு சிறந்து விளங்க ஒரு குழந்தையின் நாவில் நெல்மணியால் எழுதுகிறார் கோயில் குருக்கள். 
தமிழகம்

கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம்: நெல்மணிகளில் அகரம் எழுதி கல்வியை தொடங்கிய குழந்தைகள்

செய்திப்பிரிவு

திருவாரூர்

விஜயதசமியை முன்னிட்டு திரு வாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோயிலில் நேற்று நெல்மணிகளில் அகரம் எழுத வைத்து குழந்தைகளின் கல்வியை ஏராளமான பெற்றோர் தொடங்கி வைத்து வழிபாடு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தனூ ரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் கோயில் உள்ளது. கலை களின் தெய்வமான சரஸ்வதியை வழிபட்டால் கல்வி ஞானம், கலை ஞானம் சிறக்கும் என்பது நம்பிக்கை. ஒட்டக்கூத்தர் வழிபாடு செய்த தலம் என்பதால் இத்தலம் சிறப்புபெற்று விளங்குகிறது.

இக்கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி நேற்று அம்ம னுக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து நடை பெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை யில் ஏராளமான பக்தர்கள் தங்க ளின் குழந்தைகளுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, கோயில் வளாகத்தில் நெல்மணிகளைப் பரப்பி அதில் தங்களுடைய குழந் தைகளை தமிழின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை விரலைப் பிடித்து எழுதச் செய்து அகரம் பழக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அகரம் எழுதப் பழக்கிய பின்னர் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர்.

இதேபோல, குழந்தைக்கு பேச்சு நன்றாக வர வேண்டும் என்பதற்காக அவர்களின் நாவில் நெல்மணி யைக் கொண்டு எழுதும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நேற்று பக்தர்கள் குவிந்தனர்.

SCROLL FOR NEXT