சென்னை
வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு இடைக்கால ஊதியமாக ஒருமாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2017 நவ.1-ம் தேதிக்குப் பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதை வழங்கக் கோரி வங்கி அதிகாரிகள், ஊழியர் சங்கங் கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதையடுத்து, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து வங்கி நிர்வாகங்கள், ஊழியர் சங்கங்களுடன் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அதன்படி, ஊதிய உயர்வு குறித்து, 11-வது முத்தரப்பு பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்றது. இருப்பினும், உடன் பாடு ஏற்பட காலதாமதம் ஆகும் என்பதால், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இடைக்கால ஊதிய மாக ஒரு மாத ஊதியத்தை முன் பணமாக (அடிப்படை சம்பளம், அகவிலைப் படி மட்டும் சேர்த்து) வழங்கப்படும் என இந்திய வங்கி கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இப்பணத்தை ஊதிய உயர்வு உடன்பாடு ஏற்பட்ட பிறகு வழங் கப்படும் அரியர்ஸ் தொகையில் கழிக்கப்பட வேண்டும். மேலும், 2017 நவ.1-ம் தேதிக்குப் பிறகும், 2019 மார்ச் 31-ம் தேதிக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு இணையான ஊதி யத்தை முன்பணமாக வழங்க வேண்டும் எனவும் வங்கிகள் கூட்ட மைப்பு அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள தகவலில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறும்போது, ‘‘ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவ்விவ காரத்தில் உடனடியாக முடிவு எடுப் பதற்குப் பதிலாக, மேலும் கால தாமதப்படுத்தும் வகையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது’’ என்றார்.
இதுகுறித்து, இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன் கூறும் போது, ‘‘இந்த இடைக்கால நிவா ரணம் வழங்குவது குறித்த அறிவிப் பால், வங்கி அதிகாரிகளுக்கு 15 சதவீதம் ஊதியம் வழங்க வேண் டும், வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பிரதான கோரிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன’’ என்றார்.