சென்னை
மேகேதாட்டு அணை கட்ட கர் நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி யுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
மேகேதாட்டு அணையை கட்ட தமிழகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்றும், வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரைத் தடுத்து நிறுத்தவே இந்த அணை கட்டப்படுவதாக கர்நாடக அரசு கூறியுள்ளது. 1962-ல் ஒகேனக்கல் பகுதியில் தமிழக அரசு அணை கட்ட கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்ததால் அதற்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை. இதனால் அத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது.
மேகேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவை யில்லை என்ற கர்நாடகத்தின் அறிவிப்பு 1924-ல் இரு மாநிலங் களுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கும், உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கும், இந்திய அரசின் நெறிகாட்டுதலுக்கும் எதிரானது.
காவிரிப் படுகை மாநிலங் களில் ஏதாவது ஒன்று புதிய பாசனத் திட்டம் அல்லது மின் உற்பத்தித் திட்டம் மேற்கொள்ள வேண்டுமானால், மற்ற மாநிலங் களின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளி வாகக் கூறியுள்ளது. அதற்கு எதி ராக கர்நாடகம் செயல்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கர்நாடகம் கட்டவிருக்கும் மேகேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. கர்நாடகத்தில் பாஜக அரசு இருப்பதால் மத்திய அரசு ஒரு சார்புநிலை எடுக்குமானால் அது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
தமிழகத்தின் ஒகேனக்கல், ராசி மணல் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுக்கவேண்டும். மேகேதாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டும். இவ்வாறு பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.