திருநெல்வேலி
நாங்குநேரி இடைத்தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியிடம் எம்.பி. வசந்தகுமார் வேண்டுகோள் விடுத்தார்.
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் 24-ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி., காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு நிர்வாகி அஸ்லம் பாஷா ஆகியோர் இன்று (அக்.8) எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நெல்லை மாவட்ட அலுவலகம் வந்தனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கை நேரில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், மாநில செயலாளர் அஹமது நவி, நெல்லை மாவட்ட தலைவர் கனி, காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அப்போது, இடைத்தேர்தலில், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என எம்.பி. வசந்தகுமார் கேட்டுக்கொண்டார்.