கொடைக்கானல் தூண் பாறை பகுதியில் இயற்கை எழிலை ரசித்த சுற்றுலா பயணிகள். 
தமிழகம்

தொடர் விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

கொடைக்கானல்

வார விடுமுறை, ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

கொடைக்கானலுக்கு அனைத்து சீசன்களிலும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வார விடுமுறை, பண்டிகை விடுமுறை நாட்களில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு வருகின்றனர்.

கடந்த சனி, ஞாயிறு விடுமுறை யைத் தொடர்ந்து திங்கள், செவ் வாய் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையால் பிரையண்ட் பூங்கா, பைன்பாரஸ்ட், மோயர் பாய்ண்ட், பில்லர் ராக் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேற்று சுற்றிப் பார்த்தனர்.

ஏரியில் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர். சிறுவர்கள் ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் ஓட்டியும், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

நேற்று பகலில் மேகமூட்டம் காணப்பட்டது. மாலையில் மித மான சாரல் பெய்தது. காற்றில் ஈரப்பதம் 77 சதவீதம் இருந்தது. மாலையில் 3 கி.மீ. வேகத்தில் இதமான குளிர் காற்று வீசியது. அதிகபட்சமாக பகலில் 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 12 டிகிரி செல்சியசும் வெப்பநிலை காணப்பட்டது.

ஏராளமான சுற்றுலா வாகனங் களால் ஆங்காங்கே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது.

          
SCROLL FOR NEXT