சென்னை
தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (அக்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரிகள் கூறும்போது, ‘‘வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் தஞ்சை, ராமநாதபுரம், திருநெல் வேலி, கன்னியாகுமரி, மதுரை உட்பட பகுதிகளில் பரவலாக மழை நேற்று பெய்தது. வட மாவட்டங்களில் மட்டும் வெயில் தாக்கம் உயர்ந்து காணப்பட் டது.
இந்நிலையில் காற்று மேல டுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் இன்று (அக்டோபர் 7) மிதமான மழை பெய்யும். மேலும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய தென்கடலோர மாவட்டங் களில் கனமழைக்கு வாய்ப் புள்ளது.
இதர பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வெப்பநிலையும் சற்று உயர்ந்து காணப்படும். தற்போது தென் மேற்கு பருவமழைக்கு ஆதாரமான கீழ்திசை காற்று விலகுவதில் தொடர் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ம் தேதிக்கு பின்னரே தமிழகத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை மாநிலத்தில் ஆங் காங்கே ஒரு சில இடங்களில் மிதமான மழையே பெய்யக்கூடும். மேலும், இந்தாண்டு வடகிழக்கு பருவக்காலத்தில் இயல்பான மழைப்பொழிவு இருக்கும்’’ என்றனர்.