தமிழகம்

சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு தடை கேட்டு வழக்கு: நீதிமன்ற தலைமைப் பதிவாளர், டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு 

செய்திப்பிரிவு

சென்னை

சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான வயது வரம்பு மற்றும் தொழில் அனுபவம் தொடர்பான நிபந்தனை களை தளர்த்தி, புதிதாக விதிகளை உருவாக்கும் வரை இத்தேர்வுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர், பார் கவுன்சில் செயலர் மற்றும் டிஎன்பிஎஸ்சி செய லர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த வழக்கறி ஞரான டி.ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘‘ திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் கடந்த 2014-ம் ஆண்டு 3 ஆண்டு பிஎல் படிப்பில் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தேன். கடந்த 2018 ஜூன் 30-ம் தேதி தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து தொழில் புரிந்து வருகிறேன்.

சிவில் நீதிபதிகளுக்கான தேர்வை சமீபத்தில் சட்டப்படிப்பை முடித்த 22 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே எழுத முடியும் என நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் கடந்த 2017-ல் சட்டப்படிப்பை நிறைவு செய்த என்னால் இந்த தேர்வை எழுத முடியாது. ஏனெனில் எனது வயது தற்போது 35. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அனைவரும் சமம் என்ற சரிநிகர் சமான வாய்ப்பை தட்டிப்பறிப்பதுபோல் உள்ளது. அதேபோல 3 ஆண்டு தொழில் அனுபவம் உள்ள வழக்கறிஞர்கள் மட்டுமே சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத முடியும் என மற்றொரு நிபந்தனையும் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கேரளா, கர்நாடகா, குஜராத், ஜார்கண்ட், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதுபோல தொழில் அனுபவ நிபந்தனை கிடையாது. இந்த நிபந்தனையாலும் என்னால் இந்த தேர்வை எழுத முடியாது. எனவே தமிழகத்தில் மட்டும் சமீபத்தில் சட்டப்படிப்பை முடித்த வர்கள் 27 வயதுக்குள் இருந்தால் மட்டுமே சிவில் நீதிபதிகள் தேர்வை எழுத முடியும் என்றும், 3 ஆண்டுகள் வழக்கறிஞராக தொழில் அனுபவம் இருந்தால் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும் என விதிகளை வகுத்தது யார், சட்டப்படிப்பில் சேர வயது வரம்பே கிடையாது என்ற நிலை இருக்கும்போது சிவில் நீதிபதி களுக்கான தேர்வுக்கு மட்டும் உச்ச பட்ச வயது வரம்பை குறைவாக நிர்ணயம் செய்வது ஏன், ஷெட்டி கமிஷன் பரிந்துரைகள் இதில் பின்பற்றப்படுகிறதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக் கும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தேன். அதற்கு அவர் கள் இதற்கான ஆணவங்களை தேடிக்கொண்டிருப்பதாக பதிலளித் துள்ளனர்.

ஏனெனில் இதுபோன்ற போட்டித் தேர்வுகளுக்கு அறிவும், திறமை யும் மட்டுமே சோதிக்கப்பட வேண் டும். அதற்கு வயதும், தொழில் அனுபவமும் ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான இது போன்ற நிபந்தனைகளை தளர்த்தி, புதிதாக விதிமுறைகளை வகுக்கக் கோரி கடந்த ஆக.12-ம் தேதி தமிழக உள்துறை மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு விடுத்த கோரிக்கையை உடனடி யாக பரிசீலித்து சிவில் நீதிபதிகள் தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண் டும். அதுவரை இந்த சிவில் நீதிபதி களுக்கான தேர்வுக்கு இடைக்கால தடை பிறப்பிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மந்திரலிங்கேஸ்வரன் ஆஜ ராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள் இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை, உள்துறை செயலர், தமிழ்நாடு பார் கவுன்சில் செயலர், டிஎன்பிஎஸ்சி செயலர் உள்ளிட்டோர் வரும் அக்.21-க்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT