சென்னை,
நெல்லை மற்றும் செங்கோட்டை செல்லும் நெல்லை விரைவு ரயில் மற்றும் பொதிகை விரைவு ரயில்களில் செல்லும் பயணிகள் அக்டோபர் 10ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை இந்த ரயில்களைப் பிடிக்க தாம்பரம் ரயில் நிலையம் வர வேண்டும், எழும்பூர் அல்ல.
அதே போல் எழும்பூர் -கயா வாராந்திர விரைவு ரயில் டிசம்பர் 1ம் தேதி வரை எம்.ஜி.ஆர். செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
நெல்லை விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்படும். பொதிகை விரைவு ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்படும்.
அதே போல் நெல்லை, செங்கோட்டையிலிருந்து வரும் நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் அக்டோபர் 9 முதல் டிசம்பர் 7 வரை தாம்பரம் ரயில் நிலையத்தோடு சரி.
விழுப்புரம்- தாம்பரம் பாஸஞ்சர் ரயில் அக்டோபர் 10 முதல் டிசம்பர் 9 வரை செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும். தாம்பரம் வராது.
மூட்டை முடிச்சுகளுடன் பயணிகள் மின்சார ரயிலில் தாம்பரம் வருவது என்பது மிகுந்த சிரமமான காரியமாகும் என்பதால் இந்தத் தகவலை பகிர்ந்து வரும் சமூகவலைத்தளவாசிகள் ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவை விமர்சனம் செய்து வருகின்றனர்.