தண்ணீரில் கோலமாவைக் கொண்டு காந்தியின் உருவத்தை வரைந்த ஆசிரியர் என்.மூர்த்தி | படம்: ஜெ.மனோகரன் 
தமிழகம்

தண்ணீரில் உருவான காந்தி: ஓவிய ஆசிரியர் அசத்தல்

செய்திப்பிரிவு

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஆர்.கே. ஸ்ரீரங்கம்மாள் கல்வி நிலைய மேல் நிலைப் பள்ளியில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.

இதையொட்டி காந்தியின் கொள்கை களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன்படி ஓவிய ஆசிரியர் என்.மூர்த்தி தண்ணீரில் கோலமாவைக் கொண்டு காந்தியின் உருவத்தை வரைந்தார்.

“2 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட அகலமான பாத்திரத்தில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிற கோலமாவைக் கொண்டு தேசியக் கொடியை முதலில் வரைந்தேன். பின்னர் அதற்கு நடுவில் கருநீல கோலமாவைக் கொண்டு காந்தியின் உருவத்தை வரைந்தேன்.

இது மிகவும் சவாலான, அதே நேரத்தில் சிரமமான பணியாகும். 17 முதல் 20 நிமிடங் களுக்குள் வரைந்து முடிக்க வேண்டும். இந்த கோலமாவு காந்தி ஓவியம் அதிக பட்சமாக 2 மணி நேரம் வரை மிதக்கும். அதன் பின்னர் கரைந்து தண்ணீரில் மூழ்கிவிடும்” என்றார், என்.மூர்த்தி.

தண்ணீரில் உருவான காந்தியின் கோலமாவு ஓவியத்தை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டுகளித்தனர்.

SCROLL FOR NEXT