சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப் புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். மழைக்கு வாய்ப்பில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.
சனிக்கிழமை காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு களின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சங்கரி துர்க்கத்தில் 8 செமீ, கிருஷ்ணகிரியில் 7 செமீ, வேலூர் மாவட்டம் ஆம்பூர், நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலா, ஈரோடு ஆகிய இடங் களில் தலா 4 செமீ பதிவானது.