ஆயுதபூஜையையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 2-வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதுவரை 3.60 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.
இந்த ஆண்டு ஆயுதபூஜை 7-ம் தேதியும், விஜயதசமி 8-ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக் கள், அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், ரயில்கள் மூலம் கடந்த 2 நாட்களாக சொந்த ஊர் களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து 2-வது நாளாக நேற்றும் 765 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 2,990 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இயக்கப்படும் விரைவு ரயில் களில் நேற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதுதொடர்பாக போக்குவரத் துக் கழக உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆயுதபூஜையை யொட்டி 2-வது நாளாக நேற்றும் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்து களை இயக்கினோம். கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் இதுவரை 3.60 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், பண்டிகை விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக போதிய அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்குவோம்’’ என்றனர்.