விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவின ருடன் இணைந்து பணியாற்ற பாஜகவில் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர் தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் களுக்கு தமிழக பாஜக ஆதரவு அளித்துள்ளது.
இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவின ருடன் இணைந்து பணியாற்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதிக்கான குழுவில் பாஜக வின் தேசிய பொதுக்குழு உறுப் பினர் எஸ்.தியாகராஜன் தலைமை யில் மாநில செயற்குழு உறுப்பினர் கலிவரதன், மருத்துவப் பிரிவு மாவட்டத் தலைவர் குணாளன், மாவட்ட பொதுச்செயலாளர் ராம ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாங்குநேரி தொகுதிக்கான குழுவில் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் கட்டளை ஜோதி, தொழில்துறை பிரிவு மாநிலச் செயலாளர் ஏ.மகாராஜன், வெளி நாடு வாழ் பிரிவு மாவட்ட தலைவர் பி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.பி.தமிழ்செல்வன் ஆகியோர் உள்ளனர்.
இந்த தகவலை தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் தெரிவித் துள்ளார்.