‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி நிறுத்தத்தில், சாதாரண கட்டண பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை வழியாக மாநகர் போக்கு வரத்துக் கழகம் சார்பில் 52 வழித்தடங் களில் 256 பேருந்துகள் வாயிலாக தினமும் 2,963 பயண நடைகள் இயக்கப்படுகின்றன. ஆனால், அண்ணா சாலையில் உள்ள சாந்தி பேருந்து நிறுத்தத்தில் பெரும் பாலான சாதாரண (வெள்ளை போர்டு) கட்டண பேருந்துகள் நிறுத்தப்படுவது இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித் தனர். இதன் அடிப்படையில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் கடந்த 1-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சாந்தி பேருந்து நிறுத்தத்தில் அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளையும் நிறுத்திச் செல்ல வேண்டும் என்று அங்கு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சாதாரண கட்டண பேருந்துகள் அனைத்தும் சாந்தி நிறுத்தத்தில் நிறுத்தி இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ‘இந்து தமிழ்’ செய்தியைத் தொடர்ந்து, விரைந்து நடவடிக்கை எடுத்த சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.