விருதுநகர்
நாங்கள் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டால் திமுக கூட்டணி வைக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரி வித்தார்.
விருதுநகர் மாவட்டம், திருச் சுழி அருகே உள்ள வீரசோழன் கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்துக்கு அதிமுக மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் சித்திக் தலைமை வகித்தார்.
அமைச்சர் கே.டி. ராஜேந்தி ரபாலாஜி பேசியதாவது:
கல்விக் கடன் ரத்து, விவ சாயக் கடன் ரத்து போன்ற பொய்யான வாக்குறுதிகளை நம்பி கடந்த மக்களவைத் தேர்த லில் திமுகவுக்கு மக்கள் வாக் களித்தனர்.
தற்போது திமுகவின் ஏமாற்று நாடகம் தெரிந்துவிட்டது. அதனால்தான் வேலூர் எம்.பி. தேர்தலில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில்தான் அவர்கள் வெற்றி பெற்றனர். நாங்குநேரி, விக்கிர வாண்டி இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும். நாங்கள் பாஜக வுடன் கூட்டணியை முறித்துக் கொண்டால், திமுக கூட்டணி வைக்கத் தயாராக உள் ளது. பாஜகவை மதவாதக் கட்சி என திமுக கூறுவது நாடகம் என்று பேசினார்.
சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.