தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்: மேலாண் இயக்குநர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமீபத்தில் 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப் பட்டது. போக்குவரத்துக் கழகம், மின் வாரியம், டாஸ்மாக் நிறு வனம் உள்ளிட்டவற்றின் பணி யாளர்களுக்கு தனித்தனியாக அந்தந்த நிறுவன உயர் அதிகாரி கள் போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தெரி விக்கப்பட்டிருந்தது.

அதன்படி டாஸ்மாக் ஊழியர் களுக்கு தற்போது போனஸ் தொகை நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் கிர்லோஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல், இந்த ஆண்டு மார்ச் வரையில் பணியாற்றிய நாட் களைக் கணக்கிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் சி, டி பிரிவு ஊழியர்கள், பல்வேறு துறைகள், கழகங்களில் இருந்து அயல்பணியாக வந்தவர்கள், தற் காலிக அடிப்படையில் தொகுப் பூதியம் பெறுபவர்கள், கண் காணிப்பாளர்கள், விற்பனை யாளர், உதவி விற்பனையாளர் என ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள் போனஸ் பெற தகுதியானவர்கள்.

தகுதிக்கான ஓராண்டில் பகுதி யளவு பணிபுரிந்தவர்களுக்கு அவர்கள் பணியாற்றிய காலத்தை கணக்கிட்டு அதற்கேற்ப போனஸ் வழங்கப்படும். கடந்த 2018-19-ம் ஆண்டில் 30 நாட்களுக்கு குறையா மல் பணியாற்றியவர்களுக்கு போனஸ் பெற தகுதியுண்டு. பல்வேறு காரணங்களால் பணி யில் இருந்து விடுவிக்கப்பட்ட வர்கள், பயிற்சியில் இருப்பவர் களுக்கு போனஸ் கிடையாது.

இதன் அடிப்படையில், நிரந் தர மற்றும் அயல்பணியில் வந்த பணியாளர்கள், தலைமைச் செயலக தற்காலிக ஆண் உதவி யாளர்கள், கண்காணிப்பாளர் கள், விற்பனையாளர்கள் ரூ.16 ஆயிரத்து 800-ம், உதவி விற்பனை யாளர்கள் ரூ.16,300-ம் போன ஸாக பேறுவார்கள். இந்த போனஸ் தொகையை உடனடி யாக அந்தந்த ஊழியர்களுக்கு விடுவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT