சமக மாநில துணை பொது செயலாளர் சேவியர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் சிலையை சுத்தம் செய்தனர். 
தமிழகம்

தலைவர்களின் சிலைகளை போற்றி பாதுகாக்க வேண்டும் - சமக தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை 

தலைவர்களின் சிலைகளை அரசாங் கம்தான் சுத்தம் செய்து பாதுகாக்க வேண் டும் என்பது இல்லை. நாம் அனைவரும் போற்றி பாதுகாப்போம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரத்குமார் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை, மெரினா கடற்கரை சாலை யில் உள்ள காமராஜர் சிலை சரியாக பராமரிக்கப்படாமல் அழுக்கடைந்த நிலையில் உள்ளது என பத்திரிகையில் செய்தி வந்தது. கட்சியின் மாநில துணை பொது செயலாளர் சேவியர் தலைமை யில், பெருந்தலைவரின் சிலையை உடனடியாக சுத்தம் செய்யுமாறு, மாவட்ட நிர்வாகிகளிடம் கூறினேன்.

அதை உடனடியாக நிறைவேற்றி நமது மாநிலத்துக்கும், நாட்டுக்கும் இன்று வரை பெருமை சேர்க்கும் காமராஜர் சிலையை சுத்தம் செய்துள்ளனர். அவர் களுக்கு எனது மனம் திறந்த பாராட்டுகள்.

தலைவர்கள், அவர்களது பெருமை களைத் தொடர்ந்து போற்றுவதற்கு முக்கிய காரணம், அவர்களின் வழிகாட்டுதலில், அடுத்து வரும் சமு தாயம் முன்னேற வேண்டும் என்பதும், சிலைகள், நினைவிடங்கள் அதற்கு நினைவூட்டலாக அமையும் என்பதே ஆகும்.

எனவே, தலைவர்களின் சிலை களை அரசாங்கம் சுத்தம் செய்ய வேண்டு மென்பது இல்லை, நாம் அனைவரும் போற்றி பாதுகாப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT