திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி சரணாலயத்தில் இனப் பெருக்கத்துக்காக பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்துள்ள வெளிநாட்டுப் பறவைகள். 
தமிழகம்

வேட்டங்குடி சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

இ. ஜெகநாதன்

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருப்பத்தூர் அருகே கொள்ளு குடிப்பட்டி கண்மாயில் சுமார் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. இனப் பெருக்கம் முடிந்து ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்கு அவை திரு ம்பிச் செல்கின்றன.

உண்ணிகொக்கு, முக்குளி ப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரி வாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்திநாரை போன்ற 217 வகையான 8 ஆயிரம் வெளிநாட்டுப் பறவைகள் வருகி ன்றன. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் பறவைகள் அதிகளவில் வரவில்லை.

சமீபத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சரணாலயம் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் செப்டம்பர் மாத இறு தியில் இருந்தே பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

இது வரை பாம்புதாரா, நத்தை கொத்தி நாரை, மார்கழியன், கருநீல அரிவாள் மூக்கன் உள் ளிட்ட 17 வகையான பறவை கள் வந்துள்ளன.

இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவகோட்டையைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் கூறியதாவது: கடந்த ஆண்டு வந்தபோது குறை வான பறவைகளே இருந்தன. ஆனால் இந்தாண்டு பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. வனத் துறையினர் அமைத்துள்ள கோபுர த்தில் ஏறிப் பார்த்தால் அனைத்து பறவைகளையும் காண முடிகிறது.

மேலும் இங்குள்ள கிராம மக்கள் பறவைகளுக்காக தீபாவளி மட்டுமின்றி எந்த நிகழ்ச்சிக்கும் பட்டாசு வெடிப்பதில்லை. அவ ர்களை நினைக்கும்போது பெரு மையாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு தொலைநோக்கி உள்ளிட்ட வசதி களை செய்து தர வேண்டும் என்று கூறினார்

SCROLL FOR NEXT