தமிழகம்

சென்னைக்கு தண்ணீர் கொண்டு வந்ததில் ரூ.12.54 கோடி வசூல்; தெற்கு ரயில்வே மொத்த வருவாய் 8% உயர்வு: பொது மேலாளர் ஜான் தாமஸ் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

தெற்கு ரயில்வேயின் மொத்த வருவாய் 8 சதவீதம் உயர்ந்துள்ளது என்று பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

தெற்கு ரயில்வே சார்பில் ரயில் கள், ரயில் நிலைய வளாகங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத நிலையை உருவாக்குவதற்காக ‘தூய்மையே சேவை’ என்ற சிறப்பு இயக்கம் கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி (இன்று) வரை கடைபிடிக்கப்படுகிறது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத் தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களைப் பயன்படுத்துமாறு பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கும் 22 இயந் திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 7 இயந்திரங்கள் வைக்கப் படவுள்ளன.

இந்த நிதி ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வரையிலான நிலவரப்படி தெற்கு ரயில்வேயின் மொத்த வருவாய் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.

பயணிகளின் போக்குவரத்தால் மட்டும் கிடைத்த வருவாய் கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித் துள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க, வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்துக்கு ரயில் மூலம் 141 முறை தண்ணீர் (ஒரு முறைக்கு 2.5 மில்லியன் லிட்டர்) கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான செலவு கட்டணமாக தமிழக அரசிடம் இருந்து ரூ.12.54 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

கொருக்குப்பேட்டை லெவல் கிராசிங்கில் மாநில அரசோடு இணைந்து மேம்பாலம் அமைக் கும் பணி இரண்டு வாரத்தில் தொடங்கும். 536 ரயில் நிலை யங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தியதைப் போல், மேலும் 543 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகப்படுத்தியது போல், விரைவில் 8 ரயில்களில் எல்எச்பி ரக பெட்டிகள் இணைக் கப்படும். மொத்தமுள்ள 6,844 பெட்டிகளில் 6,729 பெட்டிகளில் பயோ கழிப்பறை அமைக்கப்பட் டுள்ளது. ரயில் நிலையங்களில் எச்சில் துப்பியதாக பிடிபட்ட 25,804 பேரிடம் இருந்து ரூ.58.70 ஆயிரம் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் 573 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 35 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ள நிலையில், 6 ரயில் நிலையங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன.

எழும்பூர், திருச்சி, சேலம், மதுரை, கோட்டயம் மற்றும் பாலக்காடு உட்பட 6 ரயில் நிலையங்களில் ரூ.121.43 கோடி செலவில் நடைபெறும் புனரமைப்பு பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் மும்பையில் சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இதுபோன்ற ரயில் சென்னையில் இயக்கப்படும்.

தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது வழித்தடம் அமைக்கும் பணிகளை வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையே புதிய வழித்தடம் அமைப்பதற்கான் ஆய்வு செய்யும் பணி முடிந்து விட்டது. ரயில்வே வாரியத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு காத் திருப்போர் பட்டியலைப் பொறுத்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 5,081 கிமீ தூர வழித்தடத்தில் 3,235 கிமீ தூரம் மின்மய மாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 239 கிமீ தூரம் மின்மயமாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வழித்தடங்களில் தனி யார் ரயில்களை இயக்குவதற்கு அனுமதி கொடுப்பதால், ரயில்வே இயக்கும் ரயில்கள் சேவையில் இருந்து நிறுத்தப்படாது. தனியார் புதிய ரயில்களை இயக்குவதால், ரயில்வே துறை வளர்ச்சி அடையும். தெற்கு ரயில்வேயில் எந்த வழித்தடத்தில் தனியார் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்படுவது குறித்த இறுதி முடிவை ரயில்வே வாரியம் எடுக்கும். கூடுதல் ரயில் சேவைகளால் அதிக பயணிகள் பயன் அடைவார்கள் என்றார்.

SCROLL FOR NEXT