துணை நடிகர் ரமேஷுடன் சப்-இன்ஸ்பெக்தர் சதீஷ்குமார். 
தமிழகம்

இருசக்கர வாகனத்தில் சென்றபோது போலீஸாரிடம் சிக்கிய நிலையில் ஹெல்மெட் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட துணை நடிகர்: சப்-இன்ஸ்பெக்டரின் வேண்டுகோளை ஏற்று சமூக வலைதளங்களில் பதிவிட்டார்

செய்திப்பிரிவு

திருச்சி

லால்குடியில் ஹெல்மெட் அணி யாமல் இருசக்கர வாகனத்தில் சென்று போலீஸாரிடம் அபராதம் செலுத்திய துணை நடிகர், ஹெல் மெட் விழிப்புணர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளி யிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் கடந்த 28-ம் தேதி இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரஜினி முருகன், மெர்சல், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகரும், டிக்-டாக் கில் பிரபலமானவருமான லால்குடி பகுதியைச் சேர்ந்த திருச்சி ரமேஷ், ஹெல்மெட் அணியாமல் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டி ருந்தார். அவரை மடக்கிய போலீ ஸார் ரூ.100 அபராதம் விதித்தனர்.

அபராதம் செலுத்திய பின் அங்கிருந்த ரமேஷ் புறப்படத் தயாரானார். அப்போது அவரிடம் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார், ‘‘நீங்கள் நடிகர்தானே, ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக ஒரு வீடியோ எடுத்து வெளியிட லாமே? ’’ எனக் கூறினார். அதற்கு சம்மதித்த ரமேஷூம் அந்த இடத்திலேயே, போலீஸாருடன் சேர்ந்து ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் அதை பதிவிட்டார்.

அதில் அவர் கூறும்போது, ‘‘நானும், என் மனைவியும் லால் குடியில் இருசக்கர வாகனத்தில் வந்தோம். ஹெல்மெட் அணிய வில்லை என்பதால் சப் இன்ஸ்பெக்டர் எனக்கு அபராதம் விதித்தார். நான் நடிகர் என அவரிடம் கூறினேன். அதற்கு அவர், நடிகராக இருந்தால் கீழே விழுந்தால் தலையில் அடிபடாதா? எனக் கேட்டார். அதன்பின் அபராதம் கட்டினேன். அத்துடன் இனிமேல் நான் எப்போதும் ஹெல்மெட் அணிந்துதான் வண்டியை ஓட்டுவேன். இதைப் பார்க்கும் நீங்களும் தயவுசெய்து ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுங்கள்’’ என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரிடம் கேட்டபோது, ‘‘நடிகரான அவர், சமூக வலைதளங்களில் வெளியிட்ட சில வீடியோக்களை பல லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். எனவே, அவரிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக ஒரு வீடியோ வெளியிடுமாறு கூறினேன். அடுத்த நொடியே அவர் அந்த வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்’’ என்றார்.

SCROLL FOR NEXT