நெல்லை
நாங்குநேரியில் இடைத்தேர்தல் எதற்காக வந்தது என்பது மக்களுக்குத் தெரியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
நெல்லையில் இன்று(செப்.30) நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெ.நாராயணன் மனு தாக்கல் செய்தார்.
மனுதாக்கலுக்குப்பின் நாங்குநேரி தாலுகா அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, " நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் எதற்காக வந்தது என்பது மக்களுக்கு தெரியும்.
இத்தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் எம்.பி.யாவதற்காக ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் வந்தது.
இத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் வெள்ளநீர் கால்வாய் திட்டத்துக்கு அதிமுக அரசு ரூ.800 கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளது. குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். மக்கள் பணிகளால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி" என்று தெரிவித்தார்.