தமிழகம்

குளச்சல் எஸ்ஐ, 9 போலீஸார் மீது வழக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை

இளைஞரைத் தாக்கிய குளச்சல் சார்பு ஆய்வாளர் உட்பட 9 போலீ ஸார் மீது வழக்குப் பதிவு செய்ய வும், அந்த வழக்கின் விசார ணையை குமரி எஸ்.பி. கண் காணிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி முண்டன் விளையைச் சேர்ந்த ராஜன் (30), உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: குளச்சல் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உட்பட 9 காவலர்கள் 2014-ல் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என்னைத் தாக்கினர். எனது உற வினர் செல்வராஜ் போலீஸாருக்கு எதிராக உயர் நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்திருப்பதாக வும், அந்த வழக்கைத் திரும்பப் பெற அவரிடம் சொல்ல வேண்டும் என்று கூறி என்னைத் தாக்கினர்.

மேலும் செல்வராஜ் இடத்தில் வெடி மருந்து இருப்பதாக எழுதி கையெழுத்திடுமாறு கட்டாயப் படுத்தினர். இல்லாவிட்டால் குடும் பத்துடன் கொலை செய்வதாக மிரட்டினர். போலீஸார் பலமாக தாக்கியதில் நான் மயக்கம் அடைந் தேன். இதனால் போலீஸார் என்னைக் கொற்றியோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது எனது உடல்நிலை மோசமாக இருந்ததால் ஜாமீனில் போலீஸார் விடுவித்தனர். எந்த குற்றத்திலும் ஈடுபடாத என்னை போலீஸார் கொடூரமாகத் தாக்கி னர். இதனால் சார்பு ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும், அந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கவும் உத்தரவிட வேண் டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனு தாரர் சார்பில் வழக்கறிஞர் ஷாஜி செல்லன் வாதிட்டார். பின்னர், வழக்கில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண் டும். இந்த வழக்கின் விசார ணையை குமரி மாவட்ட எஸ்பி கண் காணிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும், அந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்.

SCROLL FOR NEXT