ஆர்.டி.சிவசங்கர்
உதகை
முதுமலை புலிகள் காப்பகத்தை அச்சுறுத்தி வரும் பார்த்தீனியம் மற்றும் லேண்டானா களைச் செடிகள், நீலகிரி மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் வேகமாக பரவி வருவதால், வன விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பார்த்தீனியம் எனப்படும் களைச் செடியானது 1950-களில் கோதுமையுடன் கலந்து, இந்தியா வுக்குள் ஊடுருவியதாகும். இந்த தாவரத்தால் மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுகின்றன. இந்த செடியின் விதைகள் காற்றில் பரவுவதால் பல்வேறு பகுதிகளில் செழித்து வளர்கின்றன.
இந்த செடி வளரும் இடங்களில் வேறு எந்த தாவரம், புற்கள் போன்றவை வளர்வதில்லை. முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்த களைச்செடிகள் அபரிமிதமாக காணப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளில் பரவியுள்ளன.
இதேபோல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அழகுத் தாவரமாக வளர்க்கப்பட்ட லேண்டானா எனப்படும் உன்னிச் செடிகள் நீலகிரி வன கோட்டத் துக்கு உட்பட்ட குந்தா, குன்னூர் வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகள், சாலையோரப் பகுதிகளை அதிகளவு ஆக்கிர மித்துள்ளன.
இவற்றால் தாவர உன்னிகளான மான், காட்டெருமை, யானை போன்ற வன உயிர்களுக் கும், வளர்ப்பு கால்நடைகளுக்கும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அண்மையில் பெய்த மழையால் இந்தச் செடிகளில் பழங்கள் அதிகளவு காய்த்துள்ளன. இவை காய்ந்து விழும்போது மீண்டும் புதிய செடி முளைக்க கூடிய நிலையும் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘இந்த களைச் செடிகள் வேகமாக பரவி வருவ தால், மேய்ச்சல் நிலப்பரப்பு குறைவதோடு, கால்நடை களுக்கான தீவனம் குறைகிறது. தேயிலைத் தோட்டங்களிலும் இவை ஊடுருவுவதால், தேயிலைச் செடிகளும் பாதிப்படைகின்றன. எனவே, லேண்டானா மற்றும் பார்த்தீனியம் செடிகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
சோலைகள் மீட்பு சூழலியல் வல்லுநர் வசந்த் பாஸ்கோ கூறும் போது, ‘‘உன்னிச்செடிகள் அதிகரித்ததற்கு உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளின் தட்பவெப்பநிலையும் ஒரு காரணம். இவை குந்தா பகுதிகளில் உள்ள சோலைகளை ஆக்கிரமித்தால், வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும்’’ என்றார்.
இதுகுறித்து நீலகிரி கோட்ட மாவட்ட வனஅலுவலர் குருசாமி கூறும்போது, ‘‘குந்தா வனச்சரகத் துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் லேண்டானா அதிகளவில் வளர்ந்துள்ளன. சாலையோரங்கள், வருவாய்த் துறைக்கு சொந்த மான நிலங்களில் அதிகம் காணப் படுகின்றன. வனப்பகுதிக்குள் பரவ தொடங்கியுள்ள லேண்டானாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.