சென்னை
சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை சென்னை வருகிறார்.
சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழா கிண்டியில் நாளை நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங் களை வழங்குகிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நாளை காலை 9 மணிக்கு வரும் பிரதமரை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி செல்கிறார். ஐஐடியின் தரமணி வளாகத்தில் காலை 9 மணிக்கு நடக்கும் சிங்கப்பூர் இந்தியா ஹைக் கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். பின் அங்கிருந்து கிண்டி வளாகம் வரும் அவர், 56-வது பட்டமளிப்பு விழா வில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் முதல் ஐஐடி வளாகம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்ன தாக டெல்லியில் இருந்து பிரத மரின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்து ஆய்வு செய்தனர்.
காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து பிரதமர் உட்பட சில முக்கிய நபர்களுக்கு தீவிர வாதிகள் குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பிரத மரின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி முடிந்ததும் பிற்பகலில் ஹெலிகாப்டரில் விமான நிலை யம் வரும் மோடி, தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.