தமிழகம்

கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழாற்றுப்படை’ நூலின் 9-ம் பதிப்பு அறிமுக விழா: இன்று வட சென்னையில் நடக்கிறது 

செய்திப்பிரிவு

சென்னை

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 9-ம் பதிப்பு அறிமுக விழா சென்னையில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

தமிழ் இலக்கியத்திலும், இலக் கணத்திலும் முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண் டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற் றுப்படை’ என்ற வரிசையில் கவிஞர் வைரமுத்து ஆய்வுக் கட் டுரைகளாக எழுதி தமிழகமெங் கும் அரங்கேற்றினார்.

நூல் வெளியீடு

இந்த உரைகளின் தொகுப்பு சமீபத்தில் நூலாகவும் வெளி வந்தது.

இந்நூல் கடந்த 3 மாதங்களில் 9 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. தற்போது 9-ம் பதிப்பின் அறிமுக விழா வடசென்னைத் தமிழ்ச்சங்கம் சார்பில் தண்டையார்பேட்டை, தங்கம் மாளிகையில் இன்று (29.09.2019) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கல்வியாளர் பாபு புருசோத்தமன் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் சிறப் புரை ஆற்றுகிறார். மேலும் இவ் விழாவில் வடசென்னை நாடாளு மன்ற உறுப்பினர் கலாநிதி வீரா சாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எர்ணாவூர் நாராய ணன், வடசென்னைத் தமிழ்ச் சங்கத் தலைவர் எ.த.இளங்கோ, வடசென்னைத் தமிழ்ச்சங்கச் செயலாளர் வழக்கறிஞர் கு.பிரித்வி ராஜ் கியோர் உரையாற்றுகின் றனர்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், பி.கே.சேகர்பாபு, ஆர்.டி.சேகர், கே.பி.பி.சாமி உள் ளிட்டோரும் கலந்துகொள்கி றார்கள். நிகழ்ச்சியின் நிறைவாக கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றுகிறார்.

SCROLL FOR NEXT