தமிழகம்

ஓமன் நாட்டில் புயலில் சிக்கி 5 தமிழக மீனவர்கள் மாயம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் குளச் சலைச் சேர்ந்த சிலுவைதாசன்(51), ராமநாதபுரம் மாவட்டம் நம்பு தாளையை சேர்ந்த கார்மேகம், காசி லிங்கம் உட்பட தமிழக மீனவர்கள் 5 பேர், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 6 மீனவர்கள் என மொத்தம் 11 பேர், ஓமன் நாட்டில் அப்துல் ஹமீது என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

கடந்த 17-ம் தேதி 11 பேரும் ஓமன் கடல் பகுதியில் உள்ள ஓமன் மசீரா என்ற தீவில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.

ஓமன் கடல் பகுதியில் கடந்த 23-ம் தேதி வீசிய புயல் காற்றில் படகு சிக்கி அவர்கள் மாயமாகி இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. மீனவர்கள் கரை திரும் பாதது குறித்து தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள அவர் களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த குளச்சலில் உள்ள மீனவர் சிலுவைதாசனின் குடும்பத் தினர் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந் தித்து, ஓமன் நாட்டில் மாயமான மீனவர்களை மீட்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT