கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், பயிற்சி வனக்காப்பாளர் களின் அணிவகுப்பை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி. 
தமிழகம்

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அரிய வகை விலங்குகள் கொண்டுவரப்படும்: கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி தகவல்

செய்திப்பிரிவு

கோவை

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அரிய வகை பறவைகள், விலங்கு களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

வனக்காப்பாளர்கள் பயிற்சி நிறைவு மற்றும் சான்றிதழ்கள் வழங் கும் விழா, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில் நேற்று நடைபெற்றது.

பயிற்சி வனக்காப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு பதக்கங் கள், சான்றிதழ்களை வழங்கி முதல் வர் பேசியதாவது: தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சி களால், காடுகளின் பரப்பளவு அதி கரித்துள்ளது. வனத்தை பாது காக்கவும், விரிவுபடுத்தவும், திட்டங் களை செயல்படுத்தவும் போதிய பணியாளர்கள் அவசியம்.

எனவேதான், வனத்துறையில் காலியாக இருந்த 45 சதவீத களப்பணியாளர்கள் பணியிடங் களை கருத்தில்கொண்டு, நாட் டிலேயே முதல்முறையாக வனத் துறைக்கென தமிழகத்தில் 2012-ம் ஆண்டு தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உரு வாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தகுதியின் அடிப்படையில் இணைய வழித் தேர்வு மூலமாக வனவர் கள், வனக்காப்பாளர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை நவீனப்படுத்த வேண் டும் என்பதற்காக, சிங்கப்பூர், இந் தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு வனத்துறை அமைச் சர் சென்று வந்துள்ளார். அந்த நாடு களில் இருப்பது போன்று, வண்ட லூர் பூங்காவும் நவீனப்படுத் தப்படும். இன்னும் பல அரிய வகை பறவைகள், விலங்கு களை கொண்டுவருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக் கல் சீனிவாசன் பேசும்போது, “எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மலையேற்றத்துக்கான ஒழுங்குமுறை விதிகளை தமிழக வனத்துறை உருவாக்கி நடை முறைப்படுத்தியுள்ளது. யாருடைய தலையீடு இல்லாமலும், எந்த தவறும் நடக்காமலும் வனப்பணி யாளர்கள் தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களுக்கு பயிற்சியும் நிறைவு பெற்றுள்ளது. முதல்முறையாக 190 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்” என்றார்.

நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெய ராமன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் துரைராசு, கோவை மாவட்ட ஆட்சி யர் கு.ராசாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT