தமிழகம்

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க பயோமெட்ரிக் முறையில் கவுன்சலிங்: அடுத்த ஆண்டு அமல்படுத்தப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் ஆள்மாறாட்ட மோசடிகளை தடுக்க அடுத்த ஆண்டு முதல் பயோ மெட்ரிக் முறையில் கவுன்சலிங் நடத்தப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவர் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாணவர் உதித் சூர்யாவையும், அவரது தந்தையும், சென்னை அரசு ஸ்டான்லி மருத் துவமனை டாக்டருமான வெங்க டேசனையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் சான்றிதழ் கள் உள்ளிட்ட அனைத்து ஆவ ணங்களையும் சரிபார்க்குமாறு தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகமும், மருத்துவக் கல்வி இயக்குநரகமும் உத்தர விட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் சான்றிதழ்கள் சரி பார்ப்பு பணிகள் முடிந்து, அறிக் கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தனியார் கல்லூரிகளில் சான்றிதழ் கள் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லுாரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த ஒரு மாணவி மற்றும் ஒரு மாணவரின் புகைப்படம் வேறுபட்டு இருப்பதாக கல்லுாரி நிர்வாகம், மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் அளித்தது. இதையடுத்து, துணை இயக்குநர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாணவர், மாணவி, அவர்களின் பெற்றோர் ஆகியோர் விசாரணைக்காக கீழ்ப் பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் நேற்று ஆஜராயினர். அப்போது மாணவர் மற்றும் மாணவியின் சான்றிதழ் கள் உள்ளிட்ட அனைத்து ஆவ ணங்களும் சரியாக இருந்ததால், ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட வில்லை என்பது உறுதியானது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) நாராயணபாபு செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஜோதிகா, சிவராமச்சந் திரன் ஆகியோரின் புகைப்படம் வேறுபட்டு இருந்தது. விசாரணை யில், அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருப்பது தெரிய வந்தது. இதனால், அவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் உடனடியாக சேர்ந்து படிக்கலாம். அனைத்து மருத்துவக் கல்லுாரிகளும் ஆவணங்களை சரிபார்த்துள்ளன. இதில், இதுவரை எந்த புகாரும் வரவில்லை.

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் வெங்கடேசன் மீது காவல்துறை விசாரணை முடித்து அறிக்கை அளித்தபின், அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். அடுத்த ஆண்டு முதல் ‘பயோ மெட்ரிக்’ முறையில் கவுன்சலிங் நடை பெறும். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2017-ம் ஆண்டில் இருந்து மாணவ, மாணவிகளின் ஆவணங்களை சரிபார்க்க மருத்துவ கல்வி இயக்குநரகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.2017-ம் ஆண்டில் இருந்து மாணவ, மாணவிகளின் ஆவணங்களை சரிபார்க்க மருத்துவ கல்வி இயக்குநரகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

SCROLL FOR NEXT