முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் நேற்று தொடங்கின. சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத வந்த தேர்வர்கள். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் போட்டி தேர்வுகள் தொடங்கின: முதல்நாளில் 10 பாடங்களுக்கு நடந்தன

செய்திப்பிரிவு

சென்னை

முதுநிலை ஆசிரியர் பணியிடங் களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 10 பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற்றன.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முது நிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு நேற்று தொடங் கியது. முதல் நாளில் இயற்பியல், வரலாறு உட்பட 10 பாடங்களுக் கான தேர்வுகள் காலை, மாலை என இருவேளைகளிலும் நடை பெற்றன.

மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் சுமார் 60 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வில் பங்கேற்றனர். ஆசிரியர் தேர்வு முதல்முறையாக கணினி வழி யில் நடப்பதால் முறைகேடு களை தவிர்க்க அனைத்து மையங் களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும், தேர்வர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தேர்வு கடினம்

நீட் தேர்வை போல பலத்த சோதனைகளை முடித்து பெரு விரல் ரேகை வைத்த பிறகுதான் தேர்வர்கள் மையத்துக்குள் அனு மதிக்கப்பட்டனர். இதற்கிடையே நேற்று நடைபெற்ற தேர்வு வினாத் தாள்கள் சற்று கடினமாக இருந் ததாக தேர்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று (செப். 28) ஆங்கிலம், வணிகவியல் உட்பட 5 பாடங் களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.

தேர்வர்கள் செல்போன் உட்பட மின்சாதனங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in) தெரிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT