தமிழகம்

பறக்கும் மின்சார ரயில்கள் நாளை 6 மணிநேரம் நிறுத்தம் 

செய்திப்பிரிவு

சென்னை

சென்னை கடற்கரை - வேளச் சேரி மார்க்கத்தில் நாளை (செப். 29) 6 மணி நேரம் பறக்கும் ரயில்களின் சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாளை (29-ம் தேதி) காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரையில் தண்டவாள பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன.

இதனால், மேற்கண்ட நேரங் களில் மின்சார ரயில்களின் சேவை இருமார்க்கத்திலும் நிறுத் தப்படுகிறது. மொத்தம் 36 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், சென்னை கடற்கரை யில் இருந்து வேளச்சேரிக்கு மதியம் 2 மணிக்கும், வேளச் சேரியில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கும் முதல் ரயில்சேவை புறப்படும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT