தமிழகம்

மதுரை சிறையில் உதித் சூர்யா, மருத்துவர் வெங்கடேசன்:  ஏ கிளாஸ் அறைக்காக நள்ளிரவில் மாற்றம்

என்.கணேஷ்ராஜ்

மதுரை

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் நேற்றிரவே மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முன்னதாக ,சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதை மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, நேற்று(வியாழன்) மாலை மாணவர் உதித் சூர்யாவும் அவரது தந்தையும் தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது, அவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் தேனி சிறையில் அடைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

ஆனால், உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் அரசு மருத்துவர் என்பதால் அவருக்கு சிறையில் ஏ கிளாஸ் அறை பெறும் தகுதியிருக்கிறது.
அதன் அடிப்படையில் மருத்துவர் வெங்கடேசனும் அவரது மகன் உதித் சூர்யாவும் நள்ளிரவில் தேனியிலிருந்து மதுரைக்குக் கொண்டுவரப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT