கராத்தே தியாகராஜன்: கோப்புப்படம் 
தமிழகம்

ரஜினி தான் அடுத்த முதல்வர்; கோட்டையில் அவர்தான் கொடியேற்றுவார்: கராத்தே தியாகராஜன் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் எனவும், 2021-ல் அவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார் எனவும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளர் ஆவார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்துத் தொடர்ந்து பல தகவல்களை அளித்து வருபவர்களில் கராத்தே தியாகராஜனும் ஒருவர்.

இந்நிலையில், சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இன்று (செப்.27) அவரது சிலைக்கு கராத்தே தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து தெரிவித்தார். மேலும், 2021-ல் ரஜினி தான் சுதந்திர தினத்தன்று கோட்டையில் கொடியேற்றுவார் என தெரிவித்தார்.

"இன்று தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினிகாந்த் தான். இன்னும் ஆறு மாதங்களில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார். கட்சி ஆரம்பித்த பிறகு அவர் மிகப்பெரிய வெற்றி அடைந்து தமிழகத்தின் முதல்வராவார். அவர் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். 2021-ல் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று ரஜினிகாந்த் தான் கோட்டையில் கொடியேற்றுவார்," என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT