தமிழகம்

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு: 5 நாளில் 17,968 பேருக்கு ஆணை

செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் இதுவரையில் 17,968 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 1-ந் தேதி தொடங்கியது.5-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 5,329 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 983 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வில் பங்கேற்ற 4,331 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தனர். அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு அமர்வும் முடிய முடிய கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT