கோவை காந்திபார்க் அருகே உள்ள தியாகி குமரன் வீதியில் உள்ள செல்போன் கடை ஒன்றில் வடமாநில இளைஞர் நேற்று செல்போன் வாங்க வந்தார். ரூ.900 மதிப்புள்ள செல்போன் ஒன்றை வாங்குவதற்காக ஆயிரம் ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத் துள்ளார். அந்த ரூபாய்த்தாள் மீது சந்தேகமடைந்த கடை உரிமை யாளர் கோவை சிபிசிஐடி போலீ ஸாருக்கு தகவல் கொடுத்தார்.
சந்தேகத்தின் பேரில், அந்த இளைஞரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அவரிடம் 1000 கள்ள நோட்டுகள் 38 இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறும்போது, ‘பிஹார் மாநிலத்தைச் சேர்ந் தவர் ஏ.ராஜேந்திர டேண்டி (25). இவருக்கு திருமண மாகி 2 குழந்தைகள் இருப்ப தாகக் கூறப்படுகிறது. இவர் கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட் டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிஹார்சென்றுள்ளார். 10-ம் தேதி கோவைக்கு திரும்பியுள்ளார். அப்போது, உடன் பயணித்த இருவர், ராஜேந்திர டேண்டியின் குடும்ப சூழலைக் கேட்டறிந்து போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர். அதை புழக் கத்தில் விட்டு சம்பாதித்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கி யுள்ளனர். அவர்கள் இருவரும் கோவை அருகே இறங்கிச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இந்த கள்ள நோட்டுகளை மெல்லமெல்ல புழக்கத்தில்விட ராஜேந்திர டேண்டி முயற்சித் துள்ளார். ஆனால் தொடக் கத்திலேயே பிடிபட்டுவிட்டார். வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம்’ என்றனர். கள்ள நோட்டுகளை வடமாநில தொழிலாளிக்கு கொடுத்தவர்கள் குறித்து போலீஸார் விசாரிக் கின்றனர்.