தமிழகம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடு எதிரொலி; மருத்துவ மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந் ததை அடுத்து, தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் முத லாண்டு மாணவர்களின் சான்றிதழ் களை மீண்டும் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரி களில் முதலாண்டு மருத்துவப் படிப் பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவி கள் அனைவரது சான்றிதழ்களை யும் சரிபார்த்து அறிக்கை அளிக்கு மாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியது.

இதையடுத்து, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சான்றி தழ் சரிபார்ப்பு பணி கடந்த 20-ம் தேதி முதல் தீவிரமாக நடந்து வருகிறது.

மாணவர்களின் நீட் மதிப்பெண் பட்டியல், கலந்தாய்வு ஒதுக்கீடு படி வம், தற்போதைய புகைப்படம் ஆகி யவை சரிபார்க்கப்பட்டு, அவர்க ளது கையொப்பமும் பெறப்படுகி றது. இதற்காக, விடுப்பில் உள்ள மாணவர்களும் உடனடியாக வர வழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் களை சரிபார்த்த கல்லூரி நிர்வாகங் கள் அதுகுறித்த அறிக்கையை மருத் துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வருகின்றன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சரிபார்ப்பு பணி முடிந்துள்ளது. “தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாண வர்களின் விவரங்கள் சரிபார்க்கப் பட்டுவிட்டன. உதித் சூர்யா தவிர, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மற்ற மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளன. அதில் எந்த முறைகேடும் இல்லை. தனியார் மருத்துவக் கல் லூரிகளின் விவரங்கள் தற்போது வந்துகொண்டு இருக்கின்றன. அவை முழுமையாக கிடைத்த பிறகே, வேறு யாரேனும் முறைகேடு செய்துள்ளனரா என்பது தெரியவ ரும்” என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத் துவ பல்கலைக்கழக துணைவேந் தர் சுதா சேஷையன் செய்தியாளர்க ளிடம் நேற்று கூறியபோது, ‘‘மருத்து வப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யும்போதுதான் முதலாண்டு மாணவர்கள் அங்கீகரிப்படுவார் கள். நவம்பர், டிசம்பரில் அவர்களது ஆவணங்கள் அனைத்தையும் கேட்டுப் பெறுவோம். நாங்கள் அதை சரிபார்த்து பதிவு செய்வோம். இதில் பதிவு செய் யாத வரை மாணவர்கள் தேர்வு எழுத முடியாது. 2017, 2018-ல் சேர்ந்த மாணவர்கள் தற்போது படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆண்டுகளில் இதுபோல எந்த புகாரும் வராததால் அப்போது சரி பார்க்கவில்லை. ஒருவேளை சரி பார்க்க அவசியம் ஏற்பட்டால், மருத் துவக் கல்வி இயக்குநரகம், தேர்வுக் குழுவினர், மருத்துவ பணிகள் தலைமை இயக்குநருடன் பேசி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

இந்நிலையில், ‘‘அடுத்த ஆண்டு முதல், மாணவர் சேர்க்கையின் போது, பயோமெட்ரிக் முறையில், கைரேகை பதிவு செய்யப்படும். இம்முறையை பின்பற்ற நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதப்படும்’’ என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

SCROLL FOR NEXT