பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன் பேசினார். 
தமிழகம்

பெண்களுக்கு உதவும் ‘காவலன்’ செயலி: பதிவிறக்கம் செய்ய துணை ஆணையர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி

பெண்களுக்கு ஆபத்து காலத்தில் உதவும் ‘காவலன்’ செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என, திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையர் சி.சரவணன் அறிவுறுத்தினார்.

பாளையங்கோட்டை சதக்கத் துல்லா அப்பா கல்லூரியில் மகளிர் ஆலோசனை குழுவுடன் தமிழ்த் துறை மற்றும் மாணவர் பேரவை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப் புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. மாணவர் பேரவை செயலர் சுமித்ரா வரவேற்றார். முதல்வர் மு.முஹம் மது சாதிக் தலைமை வகித்தார். அரசுதவிபெறா பாடங்களின் இயக்குநர் ஏ.அப்துல் காதர் முன்னிலை வகித்தார். கலைப்புல முதன்மையர் ச.மகாதேவன் அறிமுகவுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையர் சி.சரவணன் பேசியதாவது:

மகாகவி பாரதி பயின்ற மண்ணில் பயிலும் மாணவ, மாணவி யருக்கு மனஉறுதி அதிகமாக இருக்க வேண்டும். பெண்கள் பல வீனமானவர்கள் இல்லை. பிரசவ வலியை விட உயர்ந்த வலி ஏது மில்லை. அதையே தாங்கும் வலிமை பெற்றவர்கள் பெண்கள். ‘காவலன்’ என்ற செயலியை காவல்துறை அறிமுகப்படுத்தி யுள்ளது. அதை மாணவியர் பதிவிறக்கம் செய்து கொண்டால், ஆபத்தான நேரத்தில் பேருதவி யாக இருக்கும். குழந்தைகளுக் கெதிரான குற்றம் நடைபெற்றால் 1098 என்கிற உதவி எண்ணுக்கும், பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடைபெற்றால் 181 என்ற உதவி எண்ணுக்கும் தகவல் தந்தால் காவல்துறை உடன் நடவடிக்கை எடுக்கும். காவல் துறை உங்கள் நண்பன். நீங்கள் ஒவ்வொருவரும் காவல் துறையின் தூதர்கள். சமூக விரோதிகள் உங்களைச் சீண்டிப் பார்க்கும்போது நீங்கள் துணிச்சலு டன் காவல் துறையிடம் உங்கள் பிரச்சினைகளை தெரியப் படுத்தலாம். வாகனங்களில் செல் வோர் மிரட்டினாலோ பயமுறுத்தும் விதமாக உங்கள் வாகனங்களை பின்தொடர்ந்தாலோ, வாகன எண் மற்றும் அதன் வண்ணத்தை உடனடியாக அவசர உதவிக்கு எண் 100-ல் தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு உதவுவதற்காக காத்திருக்கிறோம்.

பெற்றோரின் ஆலோசனையை ஏற்று நடந்தால் உங்கள் வாழ்க்கை யில் துயரங்கள் வராது. தவறான நண்பர்களுடன் பழகுவதால் நம் பெற்றோரையும், நல்ல உறவுகளை யும் இழப்பதோடு, வாழ்க்கை கேள் விக்குறியாக மாறிவிடும் என்றார் அவர்.

திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலர் எல்.சரஸ்வதி, மகளிர் காவல் ஆய்வாளர் இந்திரா, சொந்தம் மறுவாழ்வு மைய நிர்வாகி பி.பொன்முத்து, மூத்த ஆலோ சகர் சி.ராஜம்மாள் ஆகியோர் கருத்துரை வழங்கினர். ஏற்பாடுகளை மகளிர் ஆலோசகர் ஆஷா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT