தமிழகம்

திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை

தெற்கு ரயில்வே நேற்று வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, மேற்கண்ட நாட்களில் அரக்கோணத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (05601) அதேநாளில் மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டா செல்லும்.

திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புட்லூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரேணிகுண்டாவில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (05602) அதேநாளில் இரவு 9 மணிக்கு சென்னை கடற் கரைக்கு வரும். இந்த ரயில் பெரம் பூர், திருநின்றவூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஏகாம் பரக்குப்பம், புட்லூர் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இதேபோல் சென்னை கடற் கரையில் இருந்து அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இரவு 9.40 மணிக்கு புறப்படும் பயணிகள் பாஸ்ட் சிறப்பு ரயில் (05603) அதேநாளில் இரவு 11.15 மணிக்கு அரக்கோணம் செல்லும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர் மட்டுமே நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT