தமிழகம்

ஆயுஷ் படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு சென்னையில் தொடங்குகிறது

செய்திப்பிரிவு

சென்னை

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது.

சித்தா, ஆயுர்வேதா யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பின்னர், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. வரும் 28-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 280 இடங்கள் மற்றும் 20 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 600 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தனியார் கல்லூரிகளின் 375 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 28, 29-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,423 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 555 பேரும் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பாக மேலும் விவரங்களை ww.tnhealth.org, www.tnmedicalselection.net ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களைப் பார்த்து மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ளலாம்.

SCROLL FOR NEXT