தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கான வழிமுறைகள்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் வேட் பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய் வதற்கான வழிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

விரைவில் உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீதீமன்றத்தில் அதற்கான பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அதன்படி, நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது. தற்போது தேர் தலுக்கான முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஏற்கெனவே மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து மாநில தேர்தல் ஆணையம் கோரி கடிதம் எழுதியுள்ளது.

குலுக்கல் அடிப்படையில்...

இந்நிலையில், தேர்தலில் வேட்பாளர் களுக்கு சின்னம் ஒதுக்கீடு குறித்த அறிவிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட் டது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அதேநேரத்தில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சார்பில் அவர் களுக்கான சின்னங்கள் இந்திய தேர் தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள சின் னங்களின் அடிப்படையில் அவர் களின் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படு கிறது. கட்சி அடிப்படையில் நடை பெறாத போட்டியுள்ள தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட சுயேச்சை சின்னங் களில் வேட்பாளர்கள் போட்டியிடலாம். இந்த சின்னங்கள் குலுக்கல் அடிப் படையில் வழங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி யின் சின்னம் வேறு யாருக்கும் ஒதுக்கப் படாது. மற்ற மாநிலங்களில் அங்கீகரிக்கப் பட்ட கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு சலுகை அடிப்படை யில் சின்னம் ஒதுக்கப்படும். ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்து தற்போது அங்கீகாரத்தை இழந்துள்ள கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சலுகை அடிப்படையில் சின்னம் ஒதுக்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட் பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட பின்னரே சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும். ஒரு கட்சியின் சிறு பிரிவோ அல்லது போட்டி பிரிவினரோ சின்னத்துக்கு உரிமை கோரினால், அந்த சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பதை மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், அக்கட்சிகளிடம் இருந்து கடிதம் பெறப்பட்டு சின்னம் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT