சென்னை,
தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் கால அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறினால் அதைப் புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
அது தற்போது ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு ஆண்டு தவறினால் மீண்டும் முதலில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்
இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனவே ஓட்டுநர் உரிமம் காலாவதி தேதியை கவனிக்காதவர்கள் உரிய காலத்தில் புதுப்பித்துக் கொள்வது அவசியம்.