திண்டுக்கல்
நீண்ட இடைவெளிக்கு பிறகு திண்டுக்கல்லில் நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம், காமாட்சி புரத்தில் 16.1 செ.மீ. மழை பதி வானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொ டங்கிய ஜூன் மாதம் முதல் போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஆடி மாதம் விதைப்பு பணிகளைக் கூட விவசாயிகள் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், தென் மேற்குப் பருவமழை செப்டம்பர் மாத இறுதியில் முடிவடையும் நிலை யில், கடந்த சில நாட்களாக தினமும் இரவில் மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் குளம், கண்மாய், அணைகளுக்கு இதுவரை நீர்வரத்து இல்லாமல் இருந்தது. ஆனால், நேற்று முன் தினம் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்திலேயே அதிக பட்சமாக திண்டுக்கல் மாவட்டம், காமாட்சிபுரத்தில் 16.1 செ.மீ. மழை பதிவானது. தென்மேற்குப் பருவமழை தொடக்கம் முதல் ஏமாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் விவசாயிகள் ஆறுதல் அடைந்தனர். தற்போது கண்மாய், அணைகளுக்கு நீர்வரத்து ஏற் பட்டுள்ளதால், அடுத்துவரும் வடகிழக்குப் பருவமழை கை கொடுக்கும் நிலையில் நீர்நிலைகள் நிரம்ப வாய்ப்புள்ளது.
இதன் மூலம் விவசாயப் பணிகள், குடிநீர் ஆதாரங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளனர்.
திண்டுக்கல்................................40.6
கொடைக்கானல்.........................18
சத்திரப்பட்டி...............................60.2
நத்தம்..........................................16.5
நிலக்கோட்டை..........................21.2
வேடசந்தூர்..................................128
காமாட்சிபுரம்..............................161
மொத்த மழை அளவு.......587.74