திருவாரூர்
விவசாயிகளின் ஒற்றுமையையும் போர்க் குணத்தையும் காப்பான் திரைப்படம் ஊக்கப்படுத்துகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
இந்திய விவசாய உற்பத்தியில் மண்ணை மலடாக்கும் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டைக் கைவிட்டு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக மண்புழு வளர்ப்பு, இயற்கை உரம் தயார் செய்வது மற்றும் இவற்றைப் பயன்படுத்துவதன் அவசியத்தை நடிகர் சூர்யாவின் காப்பான் திரைப்படம் உணர்த்துகிறது.
கனிம வளங்களை எடுப்பதற் காக பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் விளை நிலங்களை அபகரிக்க மேற்கொள் ளும் சதிச் செயல்களை, விவசா யத்தை அழிக்கும் நோக்கத்துடன் உயிர்க்கொல்லி பூச்சிகள் செயற்கையாக பரப்பப்படுவதை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங் களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் அமைதி வழிப் போராட்டக்களத்தில் அதிகார வர்க்கமே கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஆதரவாக குண்டர்களை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தி விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது ஆகியவற்றை இப்படம் வெளிப்படுத்துகிறது.
விவசாயத்தையும், இந்தியப் பொருளாதாரத்தையும் அழிக்க மேற்கொள்ளும் அந்நிய நாட்டு சதிச் செயலை வெளிப்படுத்தும் அதே வேளையில், இந்திய விவசாயிகளின் பெருமையையும், உணவு உற்பத்தியின் தேவை யையும் இப்படம் வெளிப்படுத்து கிறது.
விவசாயிகளின் ஒற்றுமையை யும், போர்க் குணத்தையும் ஊக்கப்படுத்தும் விதமாக காப்பான் திரைப்படம் உள்ளது என்றார்.