காஞ்சிபுரம்
உரையாடல் மூலம் கல்வி கற்கும் மனப்பான்மையை மாணவர்கள் மத்தியில் ‘இந்து தமிழ்' போன்ற நாளிதழ்களே வளர்க்கும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
‘இந்து' குழுமத்தில் இருந்து, வரும் அக்.8-ம் தேதி முதல் ‘வெற்றிக்கொடி' என்ற பெயரில் வாரத்தில் 5 நாட்கள் மாணவர்களுக்கான சிறப்பு நாளிதழ் வெளியாகவுள்ளது. இதற்காக பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தின ராக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பங்கேற்று பேசி னார்.
அப்போது அவர் பேசிய தாவது:
மாணவர்கள் கல்வி கற்க எவ்வளவோ வழிகள் உள்ளன. மாணவர்கள் சமூக வாழ்வியலைக் கற்றுக் கொள்ளவே பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களை சமூக வாழ்வியலைப் புரிந்து கொள்ள வைக்க வேண்டும். உரையாடல் முறையில் அவர் கள் கல்வி கற்க வேண்டும். இதற்கெல்லாம் செய்தித்தாள் வாசிப்பதை மாணவர்கள் மத்தி யில் ஊக்குவிக்க வேண்டும். ‘இந்து தமிழ்' போன்ற நாளிதழ் கள் மாணவர்கள் மத்தியில் இத்தகைய திறனை வளர்ப்ப தைச் சிறப்பாகச் செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர்களுக்கான இதழ்
மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசும்போது “மாண வர்கள் தற்போது வாசிக்கும் திறனை வளர்த்துக் கொள்வதற்கு மட்டும் இல்லாமல் போட்டித் தேர்வு போன்றவற்றுக்கும் நாளிதழ்களைப் படிக்கின்றனர்.
தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த இந்த காஞ்சிபுரம் பழங் காலத்திலேயே கல்வியில் சிறந்த பகுதியாக இருந்துள்ளது.
‘இந்து தமிழ்' நாளிதழ் தனது மாணவர் பதிப்பாக வெளிவர உள்ள ‘வெற்றிக்கொடி' இதழுக்கான முதல் ஆலோச னைக் கூட்டத்தை காஞ்சிபுரத் தில் நடத்தியது சரியான தேர்வு” என்றார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசிரி யர்கள் மற்றும் கல்வியாளர்கள் ‘வெற்றிக்கொடி' நாளிதழ் மாண வர்களுக்குப் பயனுள்ள வகை யில் எவ்வாறு வர வேண்டும் என்பதற்கான பல்வேறு ஆலோச னைகளை வழங்கினர்.
இந்த விழாவில் ‘இந்து தமிழ்' விற்பனை பிரிவு ஆலோசகர் வி.ரவி, முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த ‘வெற்றிக் கொடி' மாணவர் பதிப்பு ஒவ் வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளிவரை 5 நாட்கள் பள்ளிக் கூடங்களுக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புகொள்ள..
தங்கள் பள்ளி மாணவர் களுக்கு ‘வெற்றிக்கொடி' நாளி தழை வழங்க விரும்பும் பள்ளி நிர்வாகிகள் 99402 68686, 89396 69717 ஆகிய செல்போன் எண் களில் தொடர்பு கொள்ளலாம்.