சென்னை
தீவிரவாத தாக்குதல்களை முறி யடிக்க எந்த எல்லைக்கும் செல் வோம் என்று சென்னையில் நடந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
இந்தியக் கடலோர காவல்படை யில் வீரதீர செயல்புரிந்த சிறந்த அதிகாரிகள், வீரர்களுக்கு குடி யரசுத் தலைவரின் விருது, சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது மற்றும் கடலோர காவல்படையின் வீரதீர செயல் விருது வழங்கும் விழா, சென்னை பரங்கிமலையில் உள்ள கடலோர காவல்படையின் விமானதளத்தில் நேற்று நடந்தது. மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
குடியரசுத் தலைவருக்கான வீர தீர செயல் விருதை பிரிகோ முனி தாஸ் என்பவருக்கும், சென்னை வெள்ளத்தின்போது மீட்புப் பணி களில் சிறப்பாக ஈடுபட்ட பிரதீப் குமார், விபின் குலியா, கடல் வழியாக கடத்தப்பட்ட ரூ.3,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை கண்டு பிடித்து பறிமுதல் செய்ததற்காக வேணுராஜன் அன்பரசன் உள் ளிட்ட 61 பேருக்கு விருதுகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங் கினார். பின்னர், விழாவில் அவர் பேசியதாவது:
பணியின்போது பல்வேறு வீரதீர செயல்புரிந்த அதிகாரிகள், வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது, கடலோர காவல்படை யின் உயரிய விருதுகள் வழங் கப்பட்டுள்ளன. இந்த விருது களைப் பெற்றுள்ளதன் மூலம் அவர்களுக்கு தங்கள் துறையில் மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக் கம் கிடைக்கும்.
நமது நாடு விரைவான வளர்ச் சிப் பாதையில் சென்று கொண் டிருக்கிறது. எனவே, கடல் பகுதி யில் எவ்வித பிரச்சினைகளும் ஏற் படாமல் பாதுகாக்க வேண்டும். கடல் எல்லைப் பகுதியில் பாது காப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் கடலோர காவல்படை மகத்தான பணியை ஆற்றி வரு கிறது. குறிப்பாக, சர்வதேச கட லோர காவல் அமைப்புகளுடன் இணைந்து இந்தியக் கடல் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டி வருகிறது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 4 ஆயிரம் பேரை கடலோர காவல்படை மீட் டது. கடல் பாதுகாப்பு வரலாற்றில், சரக்குக் கப்பலில் கடத்தப்பட்ட மிக அதிகபட்சமாக 1.5 டன் எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது கடத்தல்காரர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
அண்டை நாடுகளில் இருந்து தூண்டப்படும் பயங்கரவாத, தீவிர வாத செயல்கள் மூலம் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை முறியடிக்க எந்த எல்லைக்கும் செல்வோம். மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர். அதுபோன்ற சம்பவம் நமது கடல் எல்லைப் பகுதியில் மீண்டும் நிகழாது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறி னார்.
விழாவில், கடலோர காவல் படை இயக்குநர் ஜென்ரல் கே.நடராஜன், கிழக்கு பிராந்திய கமாண்டர் நாட்டியால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.