சென்னை
இரு மாநிலங்கள் இடையே நீடிக் கும் முல்லை பெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் பழனிசாமி திருவனந்தபுரத்தில் இன்று சந்திக்கிறார்.
தமிழகம் - கேரளா இடையே முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு, நெய்யாறு நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின் றன. இதுதொடர்பான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டு களாக நடந்து வருகின்றன.
இதற்கிடையில், கேரள முதல் வராக பதவியேற்ற பிறகு, பினராயி விஜயன் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமியை சென்னை தலைமைச் செயலகத் தில் சந்தித்துப் பேசினார். அப் போது, ‘‘இரு மாநில நதிநீர் பிரச் சினை குறித்து இருவரும் பேசி னோம். தொடர்ந்து பேச்சு நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண் போம்’’ என்று செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், இந்த சந்திப்பு நடக்கவில்லை.
இந்த சூழலில், கேரள அமைச் சர் கிருஷ்ணன் குட்டியை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சமீபத்தில் சந்தித்து பேசி னார். அப்போது, இரு மாநில முதல்வர்களும் எங்கு, எப்போது பேச்சு நடத்துவது, எந்தெந்த விவகாரங்கள் குறித்து பேசுவது என்பது குறித்து விரிவாக ஆலோ சிக்கப்பட்டது. இரு மாநில முதல்வர்களும் செப்டம்பர் 25-ம் தேதி (இன்று) திருவனந்தபுரத்தில் சந்தித்துப் பேச்சு நடத்துவதாக அப்போது முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, திருவனந்தபுரம் கிழக்கு துறைமுகச் சாலையில் உள்ள ஹோட்டல் மஸ்கட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று மாலை 3 மணிக்கு சந்தித்துப் பேசு கிறார். இதற்காக சென்னையில் இருந்து முதல்வர் பழனிசாமி இன்று காலை 10.45 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் கே.சண் முகம், பொதுப்பணித் துறை செயலாளர் கே.மணிவாசன் ஆகி யோரும் உடன் செல்கின்றனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் மஸ்கட்டில் தங்கும் முதல்வர், மாலையில் அங்கு கேரள முதல்வருடன் பேச்சு நடத்துகிறார்.
நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே ஏற் கெனவே உள்ள ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர். பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம், ஆனைமலை - பாண்டியாறு - புன்னம்புழா இணைப்புத் திட்டம் ஆகியவை குறித்தும் இரு தரப்பினரும் விரிவாக ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
நதிநீர் பங்கீடு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்காக கேரள முதல் வர்கள் தமிழகம் வந்து பேச்சு நடத்தி யுள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் ஒருவர் கேரளா சென்று பேச்சு நடத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. எனவே, இந்த சந்திப்பின்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவிக் கின்றனர்.
கேரள முதல்வர் உடனான பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகின்றனர்.