தமிழகம்

நாங்குநேரி இடைத்தேர்தல் 2-வது நாள் வேட்புமனு தாக்கல் நிறைவு: தேர்தல் மன்னன் பத்மராஜன் மட்டுமே மனு 

அருள்தாசன்

திருநெல்வேலி

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைதேர்தலில் போட்டியிட முதல் நாளில் யாருமே மனு தாக்கல் செய்யாத நிலையில், இரண்டாவது நாளான இன்று (செப்.24) தேர்தல் மன்னன் பத்மராஜன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்.24-ல் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு நேற்று (செப்.23) வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைதேர்தலில் போட்டியிட முதல் நாளில் யாருமே மனு தாக்கல் செய்யாத நிலையில், இரண்டாவது நாளான இன்று (செப்.24) தேர்தல் மன்னன் பத்மராஜன் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேர்தல் மன்னன் பத்மராஜன் 206-வது முறையாக இன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவர் குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் வார்டு கவுன்சிலர் வரை பல முன்னணி கட்சி தலைவர்களுடன் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடுகிறது. இத்தொகுதிக்கு அதிமுக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுமே இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் சார்பில் குமரி அனந்தன் நிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த எச்.வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகிவிட்ட நிலையில் இங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT