தமிழகம்

மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் 10-ம் வகுப்பில் தமிழுக்கு பதில் அவரவர் தாய்மொழியில் எழுதலாம்: 2022 வரை அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளி களில் பயிலும் மாணவர்கள், வரும் 2022 வரை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாடத்தை அவரவர் தாய்மொழியில் தேர்வெழுத அனு மதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தமிழக அரசு, கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி, 2006-ம் ஆண்டு முதல் மொழிவாரி சிறுபான்மை யினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் முதல் மொழிப்பாட மாக தமிழைக் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் ஏற்கெனவே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொழி வாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழுக்குப் பதி லாக தங்களின் தாய்மொழியான தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தாண்டும் அதே கோரிக் கையை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், அப்துல் குத்தூஸ், சுப்ரமணியம் பிரசாத் ஆகி யோர் அடங்கிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மொழிவாரி சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வரும் 2022 வரை தமிழ் பாடத்துக் குப் பதிலாக அவரவர் தாய்மொழி யில் மொழிப்பாடத்தை எழுதிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT