தமிழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதான வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி மனு: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதான வழக்கை பூந்தமல்லி நீதி மன்றத்தில் இருந்து வேறு நீதி மன்றத்துக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, காஞ்சிபுரம் மாவட்டம் தாளம்பூர் கிராமத்தில் தனக்கு சொந்தமான 2.94 ஏக்கர் நிலத்தை விற்பதாகக் கூறி தன்னிடம் ரூ.3.50 கோடியை பெற்றுக் கொண்டு வேறு ஒரு வருக்கு விற்றுவிட்டதாக வளசர வாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக செல்வி மற்றும் அவரது மருமகன் ஜோதிமணி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய் துள்ளனர். இந்த வழக்கு பூந்த மல்லி நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது. இந்நிலையில், பூந்தமல்லி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசா ரணை முறையாக நடைபெற வில்லை என்றும், எனவே இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ‘‘இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிலளிக்க வேண்டும் என்றும், அது வரை பூந்தமல்லி நீதிமன்றம் இந்த வழக்கில் எந்தவொரு இறுதி தீர்ப் பையும் பிறப்பிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT