சென்னை
கட்டாய வங்கிகள் இணைப்புக்கு எதிராகவும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்கக் கோரியும் வங்கி அதிகாரிகள் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நவம் பரில் காலவரையற்ற போராட் டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மாநிலச் செயலா ளர் ஆர்.சேகரன் தெரிவித்திருந் தார்.
இந்நிலையில், மும்பையில் மத்திய நிதித்துறை செயலாள ருடன் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் நேற்று பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது, கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதித்துறை செயலாளர் கூறியுள்ளார்.
இதையடுத்து 26, 27-ம் தேதிகளில் நடப்பதாக இருந்த வேலைநிறுத்தப் போராட் டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நேற்றிரவு தெரி வித்தது.