தமிழகம்

மொழி அரசியல் செய்வதற்கல்ல: தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திராத் பேச்சு

செய்திப்பிரிவு

மதுரை

மொழி என்பது அரசியல் செய்வதற்காக அல்ல என தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பேசியுள்ளார்.

மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்க விழாவில் தேனி எம்.பி.ரவீந்திரநாத் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், "உலகின் தொன்மை மொழியான தாய்மொழி தமிழை யாராலும் அழிக்க முடியாது. தமிழ் தெய்வமொழி. தமிழ் மொழியானது சித்தர்களும், அறிஞர்களும், சிந்தனையாளர்களும், இலக்கியவாதிகளும் படித்த அமுதமொழி.

ஒரு மொழியைத் தெரிந்து கொள்வது ஒரு வழியைத் திறந்து வைப்பதற்கு சமம். எந்த மொழியுமே மனித இனத்திற்கு சொந்த மொழி போலத்தான். ஒரு மொழியை விரும்பினால் கற்கலாம். இல்லையேல் விட்டுவிடலாம். மற்றபடி மொழி அரசியல் செய்வதற்கு அல்ல" என்றார்.

இந்தி திணிப்புக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதிமுகவின் ஒரே எம்.பி.யான ரவீந்திரநாத் குமார் 'எந்த மொழியுமே மனித சொந்த இனத்திற்கு சொந்த மொழி போலத்தான்' என்றதொரு மென்மையான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடியை பல இடங்களில் எம்.பி. ரவீந்திரநாத் பகிரங்கமாகப் பாராட்டியுள்ளார். இந்நிலையில், அவரின் மொழிக் கொள்கையும் பாஜகவை எதிர்ப்பதாக அமையவில்லை.

மாறாக இந்தி படித்தால் வடமாநிலங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவது சுலபம் பாஜகவினர் காரணம் கூறுவதுபோல் ஒரு மொழியைத் தெரிந்து கொள்வது ஒரு வழியைத் திறந்து வைப்பதற்கு சமம் எனப் பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT