குன்னூரில் நடந்த திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் பேசிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். 
தமிழகம்

பட்டாசுகள் வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும்: திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

செய்திப்பிரிவு

குன்னூர்

பேனர் வைப்பதை மட்டுமல்ல, பட்டாசுகள் வெடிப்பதையும் திமுகவினர் தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் விபி தெருவில் உள்ள திடலில் திமுக இளைஞரணியின் உறுப்பினர் சோ்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக அக்கட்சி யின் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குன்னூர் வந்தார். அவருக்கு திமுகவினர் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்ததுபோல பேனர்களை திமுகவினர் தவிர்த்து வருகின்றனர், ஒரு சில இடங்களில் சாலையில் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு தருகின்றனர். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பட்டாசுகளை வெடிப்பதையும் திமுகவினர் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெற்று வருகிறது, விரைவில், இந்த ஆட்சி கலைந்து, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT